/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுரங்க பாலத்தில் ஓடுதளம் சேதம்; சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
/
சுரங்க பாலத்தில் ஓடுதளம் சேதம்; சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
சுரங்க பாலத்தில் ஓடுதளம் சேதம்; சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
சுரங்க பாலத்தில் ஓடுதளம் சேதம்; சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 06, 2024 09:59 PM
உடுமலை : சுரங்கப்பாலத்தின், ஓடுதளத்தை சீரமைத்து, மழைக்காலங்களில், போக்குவரத்து துண்டிக்கப்படாமல் தவிர்க்க வேண்டும் என, ராகல்பாவி கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை நகரில் இருந்து, தங்கம்மாள் ஓடை குடியிருப்பு வழியாக, ராகல்பாவி கிராமத்துக்கு செல்லும் இணைப்பு ரோடு உள்ளது.
இந்த ரோட்டில், எம்.பி., நகர் குடியிருப்பு தாண்டியதும், அகல ரயில்பாதை குறுக்கிடுகிறது. அவ்விடத்தில், ரயில்வே சுரங்க பாதை சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
ஆனால், மழைக்காலத்தில், பாலத்தில் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற எவ்வித வசதிகளும் செய்யப்படவில்லை.
இதனால், ஒவ்வொரு மழைக்காலத்திலும், அவ்வழியாக செல்ல முடியாமல் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. நீண்ட நாட்கள் அப்பகுதியில், தண்ணீர் தேங்கி நிற்பதால், சுரங்க பாலத்தின் ஓடுதளம் முற்றிலுமாக சிதைந்து, குண்டும், குழியுமாக மாறி விட்டது.
இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் திணறியபடி, சுரங்கப்பாலத்தை கடக்க வேண்டியுள்ளது. எனவே, மழை நீர் தேங்குவதை தடுக்கவும், ஓடுதளத்தை சீரமைக்கவும், உள்ளாட்சி அமைப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ராகல்பாவி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களைச்சேர்ந்த வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.