/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'குட்கா' விற்பனை; 13 கடைகள் 'சிக்கின'
/
'குட்கா' விற்பனை; 13 கடைகள் 'சிக்கின'
ADDED : ஆக 22, 2024 12:23 AM
திருப்பூர் : உணவுபாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள், மாவட்டம் முழுவதும் கடந்த, 19ம் தேதி முதல் நேற்று வரை, 3 நாள் நடத்திய ஆய்வில், திருப்பூர் பலவஞ்சிபாளையத்தில் வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள பெட்டிக்கடை; கரட்டாங்காடு, பல்லடம், மடத்துக்குளம் பகுதிகளில், குட்கா விற்பனை செய்த 13 பெட்டிக்கடைகள் சிக்கியுள்ளன.
கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெறுவது தெரிந்தால், 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கலாம்.'TN Food safety consumer App'மொபைல் செயலியிலும் புகார் பதிவு செய்யலாம். தகவல் அளிப்பவர் விவரம் ரகசியமாக வைக்கப்படும். குட்கா விற்பனை செய்வோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.