/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உப மின் கோட்டமாக சாமளாபுரம் உதயம்
/
உப மின் கோட்டமாக சாமளாபுரம் உதயம்
ADDED : ஆக 19, 2024 11:57 PM
திருப்பூர்:மின் வாரியத்தில் கோவை தெற்கு மின் பகிர்மான வட்டம், சோமனுார் கோட்டத்தில் மங்கலம் உப கோட்டம் உள்ளிட்ட பகுதிகள் செயல்பட்டு வந்தன. அப்பகுதிகள், பல்லடம் மின் பகிர்மான வட்டம், பல்லடம் கோட்டத்துடன் இணைக்கப்பட்டன. மங்கலம், வஞ்சிபாளையம் பிரிவு அலுவலகங்கள், அவிநாசி கோட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. மங்கலத்தில் இயங்கி வந்த, உபகோட்டம் கலைக்கப்பட்டது. அக்ரஹாரப் புத்துார், பரமசிவம்பாளையம், கோம்பக்காடு, சாமளாபுரம், அய்யன்கோவில் ஆகிய பிரிவு அலுவலகங்கள் பல்லடத்துடன் இணைக்கப்பட்டன.
மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'' பல்லடம் கோட்டத்தில், சாமளாபுரம் உபகோட்ட அலுவலகம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. பிரிவு அலுவலகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, சாமளாபுரம் உப கோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. மின் நுகர்வோர், தங்கள் பகுதிக்கு உரிய அலுவலகங்களில் மின் வாரியம் தொடர்பான சேவைகளுக்கு அணுகலாம்,'' என்று தெரிவித்துள்ளார்.

