/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'சத்து' இழக்கும் திட்டம் காலி பணியிடங்கள் எக்கச்சக்கம் சத்துணவு ஊழியருக்கு நெருக்கடி
/
'சத்து' இழக்கும் திட்டம் காலி பணியிடங்கள் எக்கச்சக்கம் சத்துணவு ஊழியருக்கு நெருக்கடி
'சத்து' இழக்கும் திட்டம் காலி பணியிடங்கள் எக்கச்சக்கம் சத்துணவு ஊழியருக்கு நெருக்கடி
'சத்து' இழக்கும் திட்டம் காலி பணியிடங்கள் எக்கச்சக்கம் சத்துணவு ஊழியருக்கு நெருக்கடி
ADDED : டிச 06, 2024 04:59 AM
திருப்பூர் : ஒரு திட்டம் சிறப்பாகச் செயல்பட, போதிய ஊழியர்கள் தேவை; சத்துணவு அமைப்பாளர், சமையலர் உதவியாளர் காலிப்பணியிடங்கள் கடந்த ஐந்தாண்டு காலமாக நிரப்பப்படாததால், திருப்பூர் மாவட்டத்தில் சத்துணவுத்திட்டத்தைத் திறம்படச் செயல்படுத்துவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், 1,512 சத்துணவு மையங்கள் உள்ளன. சத்துணவு அமைப்பாளர், 1,296 பேர் உள்ளனர். இருநுாறுக்கும் அதிகமான சத்துணவு அமைப்பாளர் பணியிடம் காலியாக உள்ளது. சமையலர் மற்றும் உதவியாளர் சேர்த்து, 1,500 பேர் பணியில் உள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள மையங்களுக்கு சமையலர் உதவியாளராக, 1,900 பேர் இருக்க வேண்டும். இப்பணியிடத்தில், 400க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது. ஒரு சத்துணவு அமைப்பாளர் மூன்று மையங்களுக்கும், ஒரு சமையலர் இரண்டு அல்லது மூன்று மையங்களுக்கும் செல்ல வேண்டியுள்ளது.
கடந்த, 2019க்கு பின், ஐந்து ஆண்டுகளாக இப்பணியிடங்களுக்கு புதிதாக யாரையும் நியமிக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டு நிறைவிலும், 30 முதல், 50 பேர் வரை ஓய்வு பெறுகின்றனர். ஓய்வு பெற்று, உருவாகும் காலியிடத்துக்கான பணியையும், பணியில் உள்ளவர்கள் சேர்த்து கவனிக்க வேண்டிய நிலை உள்ளது.
குறிப்பாக, அவிநாசி, பெருமாநல்லுார் வட்டாரங்களில், மாவட்டத்தின் புறநகரில் பணியிடங்கள் காலியாக உள்ளதால், மூன்று ஆண்டுகளாக சத்துணவு பணியாளர், உதவியாளர் இல்லாமல், சமையலர் மட்டும் கொண்டு இயங்கும் மையங்களும் உள்ளன. சில மையங்களில் சத்துணவு அமைப்பாளரே சமையலராகவும், உதவியாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
ஒரு திட்டம் சிறப்பாகச் செயல்பட, போதிய ஊழியர்கள் தேவை; ஆனால் பணியிடங்கள் நிரப்பப்படாததால் பணிபுரியும் ஊழியர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதோடு, திட்டத்தைத் திறம்படச் செயல்படுத்துவதிலும் சிக்கல் எழுந்துள்ளது.
இருக்கிற வேலை போதாதென்று... சத்துணவு ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க, மாவட்ட தலைவர் சித்ரா கூறுகையில், ''காலிப்பணியிடம், ஆட்கள் பற்றாக்குறை இருந்தாலும், பல்வேறு சிரமங்களை கடந்தும் பணிபுரிகிறோம்.
சத்து மாவு வழங்கும் 'போஜன்அபியான்' திட்ட பயனாளிகளுடன் போட்டோ அனுப்ப வேண்டும் என புதிதாக உத்தரவிட்டுள்ளனர். கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வரும் ஒவ்வொருவரை நிற்க வைத்து போட்டோ எடுப்பது சாத்தியமில்லை. புதிய உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். காலியிடம் குறித்து தொடர்ந்து போராட்டங்கள் வாயிலாக வலியுறுத்தி வருகிறோம். அரசு செவிசாய்த்தால் தான் பணியிடம் நிரப்ப முடியும்'' என்றார்.
ஒரு சத்துணவு அமைப்பாளர் மூன்று மையங்களுக்கும், ஒரு சமையலர் இரண்டு அல்லது மூன்று மையங்களுக்கும் செல்ல வேண்டியுள்ளது.
கடந்த, 2019க்கு பின், ஐந்து ஆண்டுகளாக இப்பணியிடங்களுக்கு புதிதாக யாரையும் நியமிக்கவில்லை.