/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிக மாணவர் தேர்வெழுதிய பள்ளிகள்
/
அதிக மாணவர் தேர்வெழுதிய பள்ளிகள்
ADDED : மே 07, 2024 01:59 AM
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் அதிக மாணவ, மாணவியர், குறைந்த மாணவ, மாணவியர் தேர்வெழுதிய பள்ளிகள் விபரம் வெளியாகிள்ளது.
அரசு பள்ளி அளவில் அதிகபட்சமாக, கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 453 பேர் தேர்வெழுதியுள்ளனர். இவர்களில், 438 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 15 பேர் தேர்ச்சி பெறவில்லை. பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 240 மாணவியர் தேர்வெழுதினர்.
இவர்களில், 235 பேர் தேர்ச்சி பெற்றனர்.
குறைந்தபட்சமாக, கானுார்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், நான்கு மாணவர், ஒன்பது மாணவியர் என, 13 பேர் தேர்வெழுதியுள்ளனர். இந்த, 13 பேரும் தேர்ச்சி பெற்றதால், இப்பள்ளி, 100 சதவீத தேர்ச்சி. ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில், 1,148 மாணவியர் தேர்வெழுதினர்; 1096 பேர் தேர்ச்சி பெற்றனர். நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 234 பேர் தேர்வெழுதினர்; 221 பேர் தேர்ச்சி பெற்றனர்.
அரசு பள்ளி அளவில், இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 194 மாணவர், 233 மாணவியர் என, 427 பேர் தேர்வெழுதியுள்ளனர். 179 மாணவர், 226 மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 15 மாணவர், ஏழு மாணவியர் என, 22 பேர் தேர்ச்சி பெறவில்லை. திருப்பூர், சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், 152 மாணவர் தேர்வெழுதினர். 116 பேர் தேர்ச்சி பெற்றனர்; 36 பேர் தேர்ச்சி பெறவில்லை.