/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி மேலாண்மைக்குழு புதிய உறுப்பினர்கள் தேர்வு
/
பள்ளி மேலாண்மைக்குழு புதிய உறுப்பினர்கள் தேர்வு
ADDED : ஆக 20, 2024 10:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம் ;திருப்பூர் மாநகராட்சி, 22வது வார்டு, குமரானந்தபுரம் மாநகராட்சி தொடக்க பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு புதிய உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது.
தேர்தல் பார்வையாளராக முன்னாள் கவுன்சிலர் ருக்மணி, செயல்பட்டார். சிறப்பு விருந்தினராக, 22வது வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், 21வது வார்டு கவுன்சிலர் பத்மாவதி ஆகியோர் பங்கேற்றனர். இதில், 24 பேர் கொண்ட புதிய மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்பட்டனர். தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. புதிய உறுப்பினர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றுவதாக உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

