நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம் : திருப்பூர் மாநகராட்சி, 20வது வார்டு, பி.என்.ரோடு சாந்தி தியேட்டர் அருகில் பயணிகள் நிழற்குடை அமைக்க வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதனையொட்டி, கட்டி முடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடந்தது. எம்.எல்.ஏ., விஜயகுமார், நிழற்குடையை திறந்து வைத்தார். துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி, 2ம் மண்டல தலைவர் கோவிந்தராஜ், வார்டு கவுன்சிலர் குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.