/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தெருநாய்கள் கடித்து பலியாகும் ஆடுகள்; இழப்பீடு கேட்டு விடிய விடிய போராட்டம்! தடியடி நடத்தி கைது செய்த போலீசார்

ADDED : பிப் 15, 2025 07:31 AM
திருப்பூர்; தெரு நாய்களால் கடிபட்டு இறக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி, குளிரையும் பொருட்படுத்தாமல், விவசாயிகள், விடிய விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் அருகே வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட இடங்களில் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை, சுற்றித்திரியும் நாய்கள் கடிக்கின்றன; இதுவரை, நுாற்றுக்கணக்கான ஆடு, கோழிகள் பலியாகியுள்ளன. 'இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என, விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இரு நாள் முன், காங்கயம் சிவன்மலை அருகே கோவில் பாளையத்தில், 2 ஆடுகள், சென்னிலை - ராமலிங்கபுரத்தில், 20 ஆடுகள், நாய்கள் கடித்ததில் இறந்தன. ஆவேசமடைந்த கால்நடை வளர்ப்போர், சென்னிமலை - காங்கயம் ரோட்டில், பாரவலசு என்ற இடத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குளிரையும் பொருட்படுத்தாமல், நேற்று முன்தினம் இரவு முழுக்க விடிய, விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்; ரோட்டிலேயே படுத்து உறங்கினர்.
இதனால், நேற்று மாலை திருப்பூர் டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், எஸ்.பி., கிரீஷ் அசோக் யாதவ் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். வெறிநாய்களால் உயிரிழந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே போராட்டதை கைவிடுவதாக விவசாயிகள் கூறினர்.
பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அறிவுறுத்தியும், யாரும் கலைந்து செல்லாததால், போலீசார் தடியடி நடத்தி விசாயிகளை குண்டுகட்டாக துாக்கி கைது செய்து, பரஞ்சேர்வழி கரியகாளிய அம்மன் கோவில் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.