/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுமைய டேபிள் டென்னிஸ் ஸ்ரீசாய் மெட்ரிக் பள்ளி அசத்தல்
/
குறுமைய டேபிள் டென்னிஸ் ஸ்ரீசாய் மெட்ரிக் பள்ளி அசத்தல்
குறுமைய டேபிள் டென்னிஸ் ஸ்ரீசாய் மெட்ரிக் பள்ளி அசத்தல்
குறுமைய டேபிள் டென்னிஸ் ஸ்ரீசாய் மெட்ரிக் பள்ளி அசத்தல்
ADDED : ஆக 14, 2024 01:08 AM
திருப்பூர்;திருப்பூர் வடக்கு குறுமைய விளையாட்டுப் போட்டியில், டேபிள் டென்னிஸில், திருப்பூர் ஸ்ரீசாய் மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், 12 பிரிவுகளில் நடந்த போட்டியில், 7 முதலிடம், 4 இரண்டாமிடம் பெற்று அசத்தல் வெற்றி பெற்றுள்ளனர்.
இப்பள்ளி மாணவர்கள், 14 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் பிரிவில் முதலிடம், இரட்டையர் பிரிவில் இரண்டாமிடம்; 17 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதலிடம்; 19 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் பிரிவில் முதலிடம்; இரட்டையர் பிரிவில், இரண்டாமிடம் பெற்றனர்.
மாணவியர், 14 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் பிரிவில் இரண்டாமிடம்; இரட்டையர் பிரிவில் முதலிடம்; 17 வயதுக்குட்பட்டோர் இரட்டையர் பிரிவில் இரண்டாமிடம்; 19 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் உட்பட பலர் பாராட்டினர்.