/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு கலைக்கல்லுாரியில் கையெழுத்து இயக்கம்
/
அரசு கலைக்கல்லுாரியில் கையெழுத்து இயக்கம்
ADDED : செப் 03, 2024 02:05 AM

உடுமலை;உடுமலை அரசு கலைக்கல்லுாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில், கையெழுத்து இயக்கம் நடந்தது.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஈட்டிய விடுப்பு சரண் செய்ய அனுமதிக்க வேண்டும், ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நேரடி முறையில் நடத்தப்படுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும், தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
இதன் அடிப்படையில், உடுமலை அரசு கலைக்கல்லுாரி ஆசிரியர் கழகத்தின் சார்பிலும், கையெழுத்து இயக்கம் நடந்தது. பேராசிரியர்கள் பங்கேற்று கையெழுத்திட்டனர்.
உடுமலை அரசு கலைக்கல்லுாரி ஆசிரியர் கழகத்தலைவர் சிவக்குமார், செயலாளர் வேலுமணி, பொருளாளர் முகமது அலிஜாபர் முன்னிலை வகித்து கையெழுத்து இயக்கத்தை நடத்தினர்.