/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முடிவில் திடம்; செயலில் ரசனை சாதனை புரிவதற்கான 'ரகசியம்'
/
முடிவில் திடம்; செயலில் ரசனை சாதனை புரிவதற்கான 'ரகசியம்'
முடிவில் திடம்; செயலில் ரசனை சாதனை புரிவதற்கான 'ரகசியம்'
முடிவில் திடம்; செயலில் ரசனை சாதனை புரிவதற்கான 'ரகசியம்'
ADDED : ஆக 25, 2024 12:08 AM

சமீபத்தில், திருப்பூரில் 'டீசா' சார்பில் நடந்த நிகழ்ச்சியில், 'காலமே போதி மரம்' என்ற திரைப்பட இயக்குனர் குமார் எழுதிய புத்தகம் வெளியிடப்பட்டது.
'அன்புக்காக, மனிதர்கள் ஏங்கும் நிலை விரைவில் வரும்...' என்பதை மையப்படுத்திய புத்தகம் அது.
தெய்வத்திருமகள், தலைவா, தலைவி, மனிதன், இது என்ன மாயம், சைவம், வனமகன் என பல படங்களில் கதை, திரைக்கதை என பணியாற்றியுள்ளார். பல படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். தான் இயக்கும் முதல் சினிமாவின் படபிடிப்பு பணியில் தற்போது 'பிஸி'யாக இருக்கிறார். சிறந்த கட்டுரை தொகுப்புக்கான, 'படைப்பிலக்கிய விருது, 2024'க்கு தேர்வாகி இருக்கிறார்.திரைத்துறையில் பயணிக்கும் அனுபவம் குறித்து அவர் நம்முடன் பகிர்ந்தவை:நான் நடிகர்களாலோ, இயக்குனர்களாலோ ஈர்க்கப்படவில்லை; மாறாக, இளையராஜாவால் ஈர்க்கப்பட்டேன். கலைஞனாக நான் அடையாளப்பட வேண்டும் என, 3ம் வகுப்பிலேயே முடிவெடுத்து விட்டேன். இளையராஜாவின் இசை, எனக்குள் ஒரு புதிய உலகத்தை காண்பித்தது. ஒரு இயக்குனராக இருந்தால் தான், அவரை சந்திக்க முடியும் என்ற உந்துதலில் தான், இயக்குனராக முற்பட்டேன்.இளையராஜாவின் 'ஹவ் டூ நேம் இட்', 'நத்திங் பட் வொண்டர்' என்ற இரு மியூசிகல் ஆல்பத்தை இயக்கி, நண்பர்களை வைத்து நடித்தேன்; அது கல்லுாரிகள் அளவில் பிரபலமானது. பின், சினிமாவில் பார்த்திபன் சாருக்கு இணை இயக்குனராக பணியாற்றினேன். நான் பணியாற்றிய முதல் படம், இளையராஜா இசையில் உருவான 'இவண்' படம். சாதிக்க விரும்புபவர்கள், தாங்கள் எடுக்கும் முடிவில் திடமாக இருக்க வேண்டும். சிகரெட், மதுபோன்ற தீய பழக்கம், எண்ணம் எதுவும் இருக்கக்கூடாது. எதை செய்தாலும் ரசனையுடன் செய்ய வேண்டும். நல்ல நல்ல புத்தகங்கள் படிக்க வேண்டும் என்பதே என் அறிவுரை.இவ்வாறு, அவர் கூறினார்.
---
குமார்
கலைஞனாக நான் அடையாளப்பட வேண்டும் என, 3ம் வகுப்பிலேயே முடிவெடுத்து விட்டேன். இளையராஜாவின் இசை, எனக்குள் ஒரு புதிய உலகத்தை காண்பித்தது.