/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பண்ணாரிக்கு சிறப்பு பஸ் இயக்கம்
/
பண்ணாரிக்கு சிறப்பு பஸ் இயக்கம்
ADDED : மார் 24, 2024 01:38 AM
திருப்பூர், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவிலில், நடப்பாண்டு குண்டம் நிகழ்ச்சி வரும், 26ம் தேதி அதிகாலை, 2:00 மணிக்கு நடக்கிறது. பல்வேறு பகுதியில் இருந்து லட்சம் பக்தர்கள் பயணிப்பர் என்பதால், அரசு போக்குவரத்து கழகம் கோவை, ஈரோடு கோட்டங்களில் இருந்து இன்றிரவு துவங்கி, 25 மற்றும் 26ம் தேதி இரு நாட்கள், 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
கோவையில் இருந்து, 50, ஈரோட்டில் இருந்து, 80, திருப்பூரில் இருந்து, 20 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சிறப்பு பஸ் இயக்கத்தை கண்காணிக்க, 50 அலுவலர்களை கொண்ட பத்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும். கூடுதல் கட்டணம் வசூலித்தால், தற்காலிக பஸ் ஸ்டாண்டில் உள்ள இயக்க குழுவினரிடம் பயணிகள் தெரிவிக்கலாம்.

