ADDED : ஆக 15, 2024 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : தாராபுரம், அலங்கியம் ரோட்டை சேர்ந்தவர் ஜெரோமியா, 16. இவரது நண்பர்கள் டெவின், பிரின்ஸ், நித்திஸ்குமார் மற்றும் ஆசாப் டேனியல். குண்டடம் மாதிரி பள்ளியில், பிளஸ் 1 படித்து வருகின்றனர்.
நேற்று, பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முடித்து விட்டு, ஐந்து பேரும் அமராவதி ஆற்றில் குளிக்க சென்றனர். ஜெரோமியாவை காணவில்லை. நண்பர்கள் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் அளித்தனர். தாராபுரம் தீயணைப்பு வீரர்கள், மாயமான மாணவனை தேடி வருகின்றனர். நேற்று இரவு, 7:00 மணி வரை மாணவன் உடல் கிடைக்கவில்லை. இருள் சூழ்ந்த காரணத்தால், தேடும் பணி பாதிக்கப்பட்டது. தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

