/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
படம் பெரிதாக குறுமைய போட்டிகளில் மாணவர்கள் ஆர்வம்
/
படம் பெரிதாக குறுமைய போட்டிகளில் மாணவர்கள் ஆர்வம்
ADDED : ஆக 20, 2024 11:15 PM

திருப்பூர்:குறுமைய போட்டிகளில் மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
தெற்கு குறுமைய, 17 வயது மாணவர் பிரிவுக்கான கால்பந்து போட்டி, கே.செட்டிபாளையம், விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது. வடக்கு குறுமைய மாணவியர் பிரிவுக்கான போட்டி, கணியாம்பூண்டி மைக்ரோ கிட்ஸ் பள்ளி மைதானத்தில் நடந்தது.
வடக்கு குறுமைய இருபாலர் ஹாக்கி போட்டி, மாணவர் பேட்மின்டன் மற்றும் பால்பேட்மின்டன் மாணவர் கூடைப்பந்து போட்டி, சிக்கண்ணா கல்லுாரி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடந்தது. அனைத்து விளையாட்டுகளிலும், மாணவ, மாணவியர் தங்களின் முழுத்திறமையையும் வெளிக்காட்டி விளையாடினர்.
---
திருப்பூர், எஸ்.டி.ஏ.டி., வளாக மைதானத்தில் நடந்த வடக்கு குறுமைய கூடைப்பந்து போட்டியில் இன்பான்ட் ஜீசஸ் பள்ளி அணியும், ஏ.பி.எஸ்., பள்ளி அணியும் விளையாடியது.

