/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆர்.டி.ஐ.,யில் படிக்கும் மாணவர்களுக்கு கட்டணம்; பெற்றோர் சாலை மறியல்
/
ஆர்.டி.ஐ.,யில் படிக்கும் மாணவர்களுக்கு கட்டணம்; பெற்றோர் சாலை மறியல்
ஆர்.டி.ஐ.,யில் படிக்கும் மாணவர்களுக்கு கட்டணம்; பெற்றோர் சாலை மறியல்
ஆர்.டி.ஐ.,யில் படிக்கும் மாணவர்களுக்கு கட்டணம்; பெற்றோர் சாலை மறியல்
ADDED : மே 06, 2024 11:13 PM

திருப்பூர்:திருப்பூர், தாராபுரம் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆர்.டி.ஐ.,யில் பயின்று வரும் மாணவ, மாணவியர் முழு கல்வி கட்டணத்தை கட்ட கூறுவதாக கூறி, பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர், தாராபுரம் ரோடு, பொன்கோவில் நகரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி கடந்த, 1993ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. 2015ம் ஆண்டிலிருந்து கட்டாய கல்வி உரிமை சட்டம் (ஆர்.டி.ஐ.,) மூலம் மாணவ, மாணவியர் பலர் படித்து வருகின்றனர்.
கடந்த, 2022ம் ஆண்டு முதல் நர்சரியில் இருந்து மெட்ரிக் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக, இவ்வாண்டு முதல் ஆர்.டி.ஐ., சலுகை இல்லை என்று, பெற்றோர் முழு கட்டணம் செலுத்த வேண்டும் என பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, பள்ளி கட்டணத்தை கட்டவில்லையென்றால் வேறு பள்ளிகளில் சேர்த்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.
இச்சூழலில், கட்டண சலுகை தொடர வேண்டும் என வலியுறுத்தி பள்ளியில் பெற்றோர் திரண்டனர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற நல்லுார் போலீசார் பேச்சு நடத்தினர். அதில் 2022ம் ஆண் டுக்கு பின் ஆர்.டி.ஐ., மூலம் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு டியூஷன் 'பீஸ்', எட்டாம் வகுப்பு வரை வழங்கப்படும்.
மீதமுள்ள கட்டணத்தை பெற்றோர் கட்ட வேண்டும். 2022ம் ஆண்டுக்கு முன் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு, ஐந்தாம் வகுப்பு வரை டியூஷன் 'பீசை' பள்ளி நிர்வாகமே ஏற்று கொள்ளும் என முடிவு செய்யப்பட்டது. இதை ஏற்று கொண்டு பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.