/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேஷன் அரிசி கடத்தல் வாலிபர் சிக்கினார்
/
ரேஷன் அரிசி கடத்தல் வாலிபர் சிக்கினார்
ADDED : செப் 07, 2024 11:44 PM
திருப்பூர் : ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட பனியன் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்; பதுக்கிவைத்திருந்த ஒரு டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர் - காங்கயம் ரோடு, ஆர்.வி.இ., லே அவுட் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தி வைத்திருப்பதாக மாவட்ட வழங்கல் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், பறக்கும்படை தனிதாசில்தார் ரவிச்சந்திரன், ஆர்.ஐ., கார்த்திக் ஆகியோர், நேற்றுமுன்தினம் இரவு அதிரடி ஆய்வு நடத்தினர்.
அரிசி கடத்தி சென்ற, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த விக்னேஷ்வரன், 33 என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். பனியன் நிறுவன தொழிலாளியான விக்னேஷ்வரன், வீடு வீடாக சென்று, குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி, வடமாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அருகிலுள்ள குடோனில் பதுக்கிவைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி மற்றும் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய 3 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்