/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூட்டணி கட்சியே போராட்டம் நடத்தும் நிலை! ஓடை ஆக்கிரமிப்பு பிரச்னையால் வேதனை
/
கூட்டணி கட்சியே போராட்டம் நடத்தும் நிலை! ஓடை ஆக்கிரமிப்பு பிரச்னையால் வேதனை
கூட்டணி கட்சியே போராட்டம் நடத்தும் நிலை! ஓடை ஆக்கிரமிப்பு பிரச்னையால் வேதனை
கூட்டணி கட்சியே போராட்டம் நடத்தும் நிலை! ஓடை ஆக்கிரமிப்பு பிரச்னையால் வேதனை
ADDED : செப் 10, 2024 02:16 AM
உடுமலை:உடுமலை நகராட்சி பகுதியில், நீர் வழித்தடத்தை தனியார் ஆக்கிரமித்துள்ளது குறித்து, கூட்டணி கட்சியே போராட்டம் நடத்துகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும், என கவுன்சிலர்கள் பேசினர்.
உடுமலை நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது.
இதில், கவுன்சிலர்கள் பேசியதாவது:
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், குப்பை, கழிவுகள் முறையாக சேகரிக்கப்படுவதில்லை. தனியார் நிறுவனம், பணியாளர்கள், வாகனங்களை குறைத்து விட்டனர்.
'மாஸ்' கிளீனிங் என்ற பெயரில், 50 பேர் வர வேண்டிய நிலையில், குறைந்தளவு துாய்மை பணியாளர்கள் வந்து, பெயரளவிற்கு பணி நடக்கிறது. தொழிலாளர்கள், இயந்திரங்களை கொண்டு முழுமையாக பணி மேற்கொள்ள வேண்டும்.
தெரு விளக்குகள் முறையாக எரிவதில்லை. புகார் தெரிவித்தாலும் கண்டு கொள்வதில்லை. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், தற்போதுள்ள இடத்திலேயே செயல்பட வேண்டும்.
புதிதாக ஒரு ஆரம்ப சுகாதார நிலையம், 13 முதல், 15 வார்டு மக்கள் பயன்பெறும் வகையில், அமைக்க வேண்டும்,' என்றனர்.
ஐஸ்வர்யா நகர் ஓடை பெரிய அளவில் இருந்தது. தற்போது நகராட்சிக்கு சொந்தமான இடம் என போர்டு உள்ள நிலையில், அங்கு தனியாரும் அளவீடு செய்து எல்லை கற்கள் நட்டுள்ளனர். நீர் வழித்தடம் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்தின் போது, யசோதா ராமலிங்கம் லே -அவுட் வழித்தடத்தை அடைக்கக்கூடாது என மா.கம்யூ., கட்சி சார்பில், 'சங்கு ஊதும்' போராட்டம் நடத்துகின்றனர்.
தி.மு.க., அரசு, தி.மு.க., வசம் நகராட்சி உள்ள நிலையில், கூட்டணி கட்சியினரே போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஓடை ஆக்கிரமிப்பை அகற்றவும், மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
தலைவர்: நகராட்சி ரோடு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. வருவாய்த்துறைக்கு சொந்தமான ஓடை. வருவாய்த்துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு புறம் ஓடை, மறு புறம் பூங்கா என்பதால், ரோடு வசதியில்லை.
நகராட்சி தரப்பில் அனுமதி வழங்க முடியாது என கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்டில், போக்குவரத்துறை விதிப்படி, ஒரு நுழைவாயில், வெளியேறும் வழி மட்டுமே இருக்க வேண்டும். பஸ் ஸ்டாண்ட் அனுமதி பெற்றபிறகு, வழி ஏற்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும்,' என்றார்.

