/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீதியெங்கும் விரட்டும் தெரு நாய்கள்: திக்குத் தெரியாமல் திணறும் உள்ளாட்சி நிர்வாகங்கள்
/
வீதியெங்கும் விரட்டும் தெரு நாய்கள்: திக்குத் தெரியாமல் திணறும் உள்ளாட்சி நிர்வாகங்கள்
வீதியெங்கும் விரட்டும் தெரு நாய்கள்: திக்குத் தெரியாமல் திணறும் உள்ளாட்சி நிர்வாகங்கள்
வீதியெங்கும் விரட்டும் தெரு நாய்கள்: திக்குத் தெரியாமல் திணறும் உள்ளாட்சி நிர்வாகங்கள்
ADDED : ஜூலை 06, 2024 11:46 PM
திருப்பூர்:வீதி, தெருவெங்கும் பெருகிவிட்ட தெரு நாய்களின் அச்சுறுத்தலும், தாக்குதலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இப்பிரச்னைக்கு தீர்வுகாணும் ஏ.பி.சி., திட்டம் (விலங்கு பிறப்புகட்டுப் பாடு) 'இடியாப்ப சிக்கல்' நிலையில் இருக்கிறது.
திருப்பூரில் தெருநாய்த் தொல்லை அதிகரித்துள்ளது. பி.என்., ரோடு, மில்லர் ஸ்டாப்பில் தெருநாய் கடித்து குதறியதில் ஆறு பேர் காயமடைந்தனர். இத்தகைய சம்பவங்கள் மாநகரில் மட்டுமல்லாது, பல்லடம், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் கதையாக உள்ளது.
கோழிகளைக் கொன்ற நாய்கள் தற்போது ஆடுகளையும் வேட்டையாடுகின்றன. நடைபயிற்சி செல்வோரையும் விட்டு வைப்பதில்லை. டூவீலரில் செல்வோரை விரட்டி விரட்டிக் கடிக்கின்றன.
அனுமதி இல்லை
கால்நடைப் பராமரிப்புத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
முந்தைய காலங்களில், உரிமம் பெறாத நாய்கள், தெரு நாய்களை பிடித்துச் சென்று கொல்வதற்கு அனுமதி இருந்தது; அப்போது, தெரு நாய்களின் எண்ணிக்கை கட்டுக்குள் இருந்தது. தற்போது, தெரு நாய்களை கொல்வதற்கு அனுமதி கிடையாது; மாறாக, ஏ.பி.சி., (விலங்கு பிறப்பு கட்டுப்பாடு) எனப்படும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த மட்டுமே சட்டம் உள்ளது.
கருத்தடை கடினம்
இதை செயல்படுத்த முதலில், தெரு நாய்களை விரட்டி பிடிக்க பயிற்சி பெற்றவர்கள் வேண்டும்; பிடித்த நாய்களை கொண்டு செல்ல வாகனம் வேண்டும்.
அந்த நாய்களை ஒரு நாள் தனிமையில் வைத்து, அதற்கு ஏதேனும் நோய் உண்டா என, பரிசோதிக்க வேண்டும்; சில நாய்களுக்கு 'கேன்சர்' தொற்று கூட இருக்க வாய்ப்புண்டு; அத்தகைய நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய மாட்டார்கள்.
அறுவை சிகிச்சை செய்த நாய்களை, 3,4 நாட்கள் வைத்து, அதற்கு தேவையான உணவு, நீர் வழங்கி கண்காணிக்க வேண்டும். பின், அந்தநாய் எங்கு பிடிக்கப்பட்டதோ, அதே இடத்தில் கொண்டு சென்று விட வேண்டும்.
இந்த பணியை மேற்கொள்ள கால்நடை பராமரிப்புத்துறையில் ஆட்களோ, தேவையான டாக்டர், ஊழியர்கள் மற்றும் செலவினங்களை ஈடு செய்ய நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட எந்த கட்டமைப்பும் கிடையாது. எனவே, இப்பணியை தனியார் அமைப்பினர் வாயிலாகத் தான் மேற்கொள்ள வேண்டும்.
தீர்க்கப்படாத சிக்கல்
ஒரு நாளைக்கு, அதிகபட்சம், 5 முதல், 6 பெண் நாய்கள்; 5 முதல், 10 ஆண் நாய்களுக்கு மட்டுமே கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய முடியும். இந்த சூழலில், ஒவ்வொரு தாலுகா, வட்டம் வாரியாக, தெருநாய் கருத்தடை யூனிட் ஏற்படுத்தி, இப்பணியை மேற்கொண்டால் மட்டுமே அவற்றை கட்டுப்படுத்த முடியும்.
இப்பணியை மேற்கொள்வதற்காகவே டாக்டர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் அடங்கிய குழு ஏற்படுத்தப்பட வேண்டும்.முந்தைய காலங்களில் கால்நடைகளை வெட்கை நோய் தாக்கிய போது, அரசின் சார்பில், பிரத்யேக டாக்டர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, அவர்கள், ஆண்டு முழுக்க கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தொடர்ச்சியாக மேற்கொண்டனர்.
அதன் விளைவாகத்தான் வெட்கை நோய் கட்டுக்குள் வந்தது. அதே போன்று தெரு நாய்களுக்கு தொடர்ச்சியாக கருத்தடை பணிகளை செய்தால் மட்டுமே அவற்றை கட்டுப்படுத்த முடியும்.
கண்காணிப்பு அவசியம்தெரு நாய்களுக்கு இனப்பெருக்கம் செய்ய முன்வரும் தனியார் அமைப்பினருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்; நிதி ஒதுக்க வேண்டும். அவர்கள் மேற்கொள்ளும் பணியை கண்காணிக்கவும் வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பழகினால் விடாது
'தெரு நாய்கள் கூட்டமாக சேர்ந்து ஒரு பழக்கத்தை பழகி விட்டால் அதை தொடர்ந்து செய்யும். உதாரணமாக கூட்டமாக சேர்ந்து மக்களை விரட்டி பழகினால், டூவீலரில் செல்வோரை கூட விரட்டும்; அச்செயலில் தொடர்ந்து ஈடுபடும். அதுபோன்று தான், கோழி, ஆடுகளை கடித்து பழகிவிட்ட நாய்கள், அச்செயலில் தொடர்ந்து ஈடுபடுகின்றன' என, கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.