ADDED : ஜூலை 12, 2024 12:37 AM
திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  பல்வேறு பகுதிகளில் கோடை மழை பொய்த்துப் போனது. நிலத்தடி நீர்மட்டம் சரிந்ததால் தென்னை மரங்களுக்கு கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  மரத்தில் உள்ள குறும்பைகள் உதிர்ந்து வருவதால் விற்பனைக்கு வரும் இளநீர் வரத்து குறைந்து வருகிறது. இதனால், ஒரு இளநீர் 35 முதல், 40 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது, பல கடைகளில், 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.