/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜெயந்தி பப்ளிக் பள்ளி மாணவர்கள் அசத்தல்
/
ஜெயந்தி பப்ளிக் பள்ளி மாணவர்கள் அசத்தல்
ADDED : ஆக 19, 2024 11:53 PM

திருப்பூர்:திருப்பூர், ச ேஹாதயா டென்னிகாய்ட் போட்டி, அட்வைதா சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்தது.
இதில், 14 வயதுக்குட்பட்ட ஒற்றையர் பிரிவில், ஜெயந்தி பப்ளிக் பள்ளி 8ம் வகுப்பு மாணவன் தனுவந்த் அண்டர், முதலிடம்; 19 வயதுக்குட்பட்ட ஒற்றையர் பிரிவில், 12ம் வகுப்பு மாணவன் அஸ்வின், இரண்டாமிடம்; இரட்டையர் பிரிவில் அபிேஷக், மமூன் ஜோடி மூன்றாமிடம் பெற்றனர். 14வது திருப்பூர் மாவட்ட ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி, ஜெ.சி.எஸ்., அகாடமியில் நடந்தது. 100க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில், ஜெயந்தி பப்ளிக் பள்ளியை சேர்ந்த மாணவி கிரிஷியா, இரண்டு வெள்ளி; தீபஜோதி, ஒரு தங்கம், இரு வெள்ளி பதக்கம் பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி தாளாளர் கிருஷ்ணன், பள்ளி முதல்வர் மலர்விழி, பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் வினோத், கவுரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

