/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோடை மழை பொழியுது குளம், குட்டை நிரம்புது
/
கோடை மழை பொழியுது குளம், குட்டை நிரம்புது
ADDED : மே 23, 2024 04:17 AM

அவிநாசி: அவிநாசி சுற்றுவட்டாரத்தில் பெய்யும் மழையால், குளம், குட்டைகள் நிரம்புகின்றன.
அவிநாசி வட்டாரத்தில் வழக்கத்துக்கு மாறாக, கோடை மழை அதிகளவில் பெய்து வருகிறது. குளம், குட்டைகளுக்கு தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. இதுவரை இல்லாத அளவில், கருவலுார் குளத்தில் மழைநீர் ததும்பி நிற்கிறது. அதேபோல், தத்தனுார், போத்தம்பாளையம், நடுவச்சேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள குளம், குட்டை களிலும் நீர் நிரம்ப துவங்கியிருக்கிறது.
இனி, 'பருவமழை தீவிரமடையும்' என, வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், குளம், குட்டைகளில் நீர் நிரம்பி வெளியேறவும் வாய்ப்புஉள்ளது. எனவே, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறையினர், நீர் வழித்தடங்களை சுத்தம் செய்து, மழைநீர் வீணாகாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

