/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேன் கவிழ்ந்து விபத்து அனுமன் சிலை உடைந்தது
/
வேன் கவிழ்ந்து விபத்து அனுமன் சிலை உடைந்தது
ADDED : ஆக 23, 2024 10:40 PM

திருப்பூர்;புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லுாரி அருகே, அப்பகுதியினர் ஆஞ்சநேயருக்கு கோவில் அமைத்துள்ளனர். இக்கோவிலில் பிரதிஷ்டை செய்ய ஏழு அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை திருப்பூர் அருகேயுள்ள திருமுருகன்பூண்டியில் உள்ள ஒரு சிற்பக் கலைக்கூடத்தில் வடிவமைக்கப்பட்டது.
சிலை தயாரான நிலையில் நேற்று காலை புதுக்கோட்டையிலிருந்து வந்த கோவில் நிர்வாகிகள் சிலையை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். வேன் காங்கயம் ரோடு, நாச்சிபாளையம் பிரிவு அருகே சென்ற போது, எதிர்பாராத விதமாக நடு ரோட்டில் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் வாகனத்திலிருந்த சிலை ரோட்டில் விழுந்து இரண்டு துண்டாக உடைந்தது. அதில் பயணித்த இருவர் காயமடைந்தனர்.அருகில் இருந்தோர், இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
---
வேன் விபத்துக்குள்ளானதில், வேனில் இருந்த அனுமன் சிலை உடைந்தது.

