/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறை முன் காத்திருக்க இடம் இல்லை
/
சிறை முன் காத்திருக்க இடம் இல்லை
ADDED : ஜூலை 05, 2024 11:54 PM

பல்லடம்;பல்லடம், -மங்கலம் ரோட்டில் கிளை சிறை உள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கிளைச் சிறை ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதாகும். சிறுவர் சீர்திருத்த பள்ளியாக இருந்த இச்சிறைச்சாலை, 20 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாடு இன்றி கிடந்தது. சிறை துறை வசம் உள்ள இந்த கிளைச் சிறையில், ஒரே நேரத்தில், 38 பேரை அடைக்கும் வசதி உள்ளது. கடந்த, 2021ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
பல்வேறு சிறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகள், இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.
சிறையில் இருக்கும் கைதிகளை பார்க்க தினசரி, ஏராளமான உறவினர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு கைதிகளை சந்திக்க வருபவர்கள், உரிய அனுமதி பெற்று குறித்த நேரத்துக்கு வருகின்றனர். பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பின்னரே கைதிகளை பார்க்க உறவினர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதுவரை, சிறைச்சாலைக்கு வெளியே ரோட்டில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், கைதிகளை பார்க்க வரும் பெண்கள், தாய்மார்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் கடும் வெயிலிலும், மழையிலும் காத்திருந்து அவதிக்குள்ளாகின்றனர்.
---
பல்லடம் கிளைச்சிறை முன்
கைதிகளை பார்க்க காத்திருக்கும் உறவினர்கள்