/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் முப்பெரும் விழா
/
வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் முப்பெரும் விழா
ADDED : பிப் 24, 2025 09:34 PM

உடுமலை,; உடுமலை வித்யாசாகர் கல்லுாரியில், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் உலகத்தாய்மொழி நாள் விழா, புகைப்படக் கண்காட்சி, தேவராட்டம் என முப்பெரும் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். தமிழ்த்துறைத்தலைவர் சிவசாமி வரவேற்றார்.
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் அருட்செல்வன்,' உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் வெளியிடப்பட்ட நூல்கள் குறித்தும், களப்பணிகள் குறித்து விளக்கினார்.
மத்திய தொல்லியல் துறை (ஓய்வு) மூர்த்தீஸ்வரி, கல்வெட்டுகளில் தமிழ் என்ற தலைப்பில், 'கொங்கு நாட்டின் கல்வெட்டுகளில் கூறப்பெற்ற தாய்த்தெய்வ வழிபாடு, தமிழ் எழுத்துக்கள், பிராமி எழுத்துக்கள், தென்கொங்கு நாட்டின் தொன்மங்கள் குறித்து விளக்கினார்.
இதில், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் தொகுக்கப்பட்ட உடுமலை மற்றும் சுற்றுவட்டாரங்களில் களத்தரவுகளில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் சின்னங்கள் மற்றும் புகைப்படக்கண்காட்சி மற்றும் மாணவர்களின் தேவராட்டமும் நடந்தது.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறை பேராசிரியர், சிவசாமி மாணவர்கள் பரணி பிரியா, விநோதினி, தரனேஷ்குமார், விஷ்வா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.