/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் பா.ஜ., வேட்பாளர் சொத்து மதிப்பு ரூ.32.33 கோடி
/
திருப்பூர் பா.ஜ., வேட்பாளர் சொத்து மதிப்பு ரூ.32.33 கோடி
திருப்பூர் பா.ஜ., வேட்பாளர் சொத்து மதிப்பு ரூ.32.33 கோடி
திருப்பூர் பா.ஜ., வேட்பாளர் சொத்து மதிப்பு ரூ.32.33 கோடி
ADDED : மார் 29, 2024 01:28 AM
திருப்பூர்;திருப்பூர் பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம், 32.33 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
திருப்பூர் லோக்சபா தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக முருகானந்தம் போட்டியிடுகிறார். வேட்புமனுவில் இவர், கையிருப்பு, வங்கி கணக்கில் உள்ள ரொக்கம், பங்கு முதலீடு, வாகனங்கள் உள்பட தனது பெயரில் மொத்தம், ஒரு கோடியே 85 லட்சத்து 4,666 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
கையிருப்பு, வங்கி கணக்கு, நகை, வாகனம் உள்பட மனைவி பெயரில், 3 கோடியே 76 லட்சத்து 63 ஆயிரத்து 222 ரூபாய்க்கு அசையும் சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அசையும் சொத்தில், 900 கிராம் தங்கம்; 10 கிலோ வெள்ளி; 55 காரட் வைர நகைகளும் அடங்கும்.
தனது பெயரில், 5 கோடியே 84 லட்சத்து 666 ரூபாய்க்கும், மனைவி பெயரில், 20 கோடியே 86 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பில் அசையா சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். அசையும் சொத்து 5 கோடியே 61 லட்சத்து 67 ஆயிரத்து 891 ரூபாய்; அசையா சொத்து 26 கோடியே 71 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் என, மொத்தம் 32 கோடியே 33 லட்சத்து 1891 கோடிக்கு சொத்து இருப்பதாகவும்; தனது பெயரில், 7.25 லட்சம் ரூபாயும்; மனைவி பெயரில் 5 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம், வேட்புமனு தாக்கலின் போது, 'அபிடவிட்' இணைக்கவில்லை. வேட்புமனு தாக்கல் நிறைவுநாளில், அதுவும் கடைசி நேரத்தில் 'அபிடவிட்' தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

