/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உத்தமலிங்கேஸ்வரர் - ஆதிகேசவப்பெருமாள் கோவில் மஹா கும்பாபிேஷகம்
/
உத்தமலிங்கேஸ்வரர் - ஆதிகேசவப்பெருமாள் கோவில் மஹா கும்பாபிேஷகம்
உத்தமலிங்கேஸ்வரர் - ஆதிகேசவப்பெருமாள் கோவில் மஹா கும்பாபிேஷகம்
உத்தமலிங்கேஸ்வரர் - ஆதிகேசவப்பெருமாள் கோவில் மஹா கும்பாபிேஷகம்
ADDED : ஆக 29, 2024 02:29 AM

அனுப்பர்பாளையம் : பெருமாநல்லுாரில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தமலிங்கேஸ்வரர் கோவில்; ஆதிகேசவப்பெருமாள் கோவில் கும்பாபிேஷக விழா, கடந்த 23ம் தேதி துவங்கியது. நேற்று காலை 6:30 முதல் 7:30 மணிக்குள் ஆதிகேசவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகமும்; 9:00 முதல் 9:40 மணிக்குள் உத்தமலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகமும் நடந்தன. கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசித்தனர். பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கபட்டது.
கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கொண்டத்து காளியம்மன் கோவில் வளாகத்தில் அன்னதானம் நடந்தது. அவிநாசி டி.எஸ்.பி., சிவகுமார் தலைமையில், 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.