sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சூரிய பகவான் தலமாக திகழும் உத்தமலிங்கேஸ்வரர் கோவில்

/

சூரிய பகவான் தலமாக திகழும் உத்தமலிங்கேஸ்வரர் கோவில்

சூரிய பகவான் தலமாக திகழும் உத்தமலிங்கேஸ்வரர் கோவில்

சூரிய பகவான் தலமாக திகழும் உத்தமலிங்கேஸ்வரர் கோவில்


ADDED : ஆக 23, 2024 11:35 PM

Google News

ADDED : ஆக 23, 2024 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருமாநல்லுாரில் உள்ள கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம லிங்கேஸ்வரர் , ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா, 28ம் தேதி நடக்கிறது. இத்தல மகிமைகளை அறிந்துகொள்வோம்.

நாடி வந்த பக்தருக்கு நற்கதி அருள்வதில், உத்தம லிங்கேஸ்வரர் கோவில் முக்கியமானது.

கொங்கு நாட்டிலும், நவகிரகங்களுக்கான பரிகார தலங்கள் உள்ளன. அந்தவகையில், இக்கோவில் சூரிய பகவானுக்கான பரிகார தலமாக விளங்குகிறது. கோவில் வளாகம் முன்புள்ள துாபஸ்தம்பம் 70 அடி உயர வெள்ளைக்கற்களால் ஆனது; தல விருட்சமான வில்வ மரத்தின் அடியில், விநாயகப் பெருமான் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

கோவில் வெளியில், வன்னி மரத்தின் கீழ், நாகர்கள் புடைசூழ விநாயகர் அருள்பாலிக்கிறார். உத்தமலிங்கேஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்மன் கோவில்கள், மேற்கு நோக்கி அமைந்துள்ளன.

அம்மனை பார்த்தபடி, சோழீஸ்வரர் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. வழக்கமாக, சூரியன் மற்றும் சந்திரபகவான், சிவபெருமானை நோக்கியபடி காட்சியளிப்பது வழக்கம். திருத்தலத்தில் சூரிய பகவான் தனி சன்னதி கொ ண்டு அருள்பாலிக்கிறார்.

சிவபெருமானுக்கும் கோவர்த்தனாம்பிகை சன்னதிக்கும் இடையே, தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தியை நோக்கியபடி, சூரிய பகவான் தனி சன்னதி கொண்டிருக்கிறார்.

இத்தலம், சூரிய பரிகார தலமாக அருளாட்சி புரிகிறது. சூரிய திசை, புத்தி நடப்பவர்கள்; சிம்மம்,மேஷம், துலாம் ராசியினர் உத்தமலிங்கேஸ்வரரையும், அம்மனையும் வழிபட்டு, சூரிய பகவானுக்கு தீபம் ஏற்றி வைத்து வழிபட எல்லாவித தடைகளும், தோஷங்களும் நீங்கி நல்லது நடக்கும்; நவகிரகங்கள் வசந்த மண்டபத்திலேயே கதவின் வலப்புறம் அமைந்துள்ளன. இடப்புறம் சனி பகவான் காகத்தின் மீது அமர்ந்த நிலையில் மேற்கு நோக்கி, தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.






      Dinamalar
      Follow us