/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவேகானந்தா வித்யாலயாபள்ளி ஆண்டு விழா
/
விவேகானந்தா வித்யாலயாபள்ளி ஆண்டு விழா
ADDED : ஆக 19, 2024 11:49 PM

திருப்பூர்:திருப்பூர் கே.செட்டிபாளையம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில், 6 முதல், 12ம் வகுப்பு வரை, பள்ளி ஆண்டு விழா நடந்தது.பள்ளி துணை முதல்வர் ரவி, வரவேற்றார்.
விவேகானந்தா சேவா அறக்கட்டளை துணை தலைவர் ஞானபூபதி, தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார், முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக, பி.டி.ஏ., சங்க முன்னாள் தலைவர் வெங்கட்ராமன் ஆகியோர் பேசினர். மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியின் மூத்த முதல்வர் மணிகண்டன், ஆண்டறிக்கை வாசித்தார். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆசிரியை உஷாதேவி பேசினார்.விழாவில், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவியர், பெற்றோர், பி.டி.ஏ., சங்க உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.

