/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்மார்ட் வகுப்பறைகளில் சுவர் ஓவியங்கள் பணி
/
ஸ்மார்ட் வகுப்பறைகளில் சுவர் ஓவியங்கள் பணி
ADDED : ஆக 10, 2024 03:09 AM
உடுமலை;அரசுப்பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான வண்ணம் அடித்தல் பணிகள் துவங்கியது.
உடுமலை சுற்று வட்டாரத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், நடுநிலைப்பள்ளிகளில், கம்ப்யூட்டர் ஆய்வகம் அமைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடக்கிறது. இணைய சேவை பெற்றுள்ள பள்ளிகளில், அடுத்தகட்ட பணிகளும் துவங்கியுள்ளது. துவக்கப்பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு பொருத்தப்பட உள்ள வகுப்பறைகளில், மாணவர்களை கவரும் வகையிலான வண்ண ஓவியங்கள், 'பாலா ஓவியங்கள்' என்ற பெயரில் சுவர்களில் வரையப்படுகிறது.
அதேபோல், நடுநிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆய்வகம் அமைக்கப்பட உள்ள வகுப்பறையில், சுவர்களில் வெள்ளை அடிக்கப்படுகிறது. உடுமலை, மடத்துக்குளம் வட்டார துவக்கப்பள்ளிகளில், பாலா ஓவியங்கள் வரையும் பணிகள் துவங்கியுள்ளன.
ஆசிரியர்கள் கூறியதாவது: மாணவர்களுக்கு மகிழ்ச்சியான சூழலாக மாற்றும் வகையில், ஓவியங்களை தேர்வு செய்து அதை சுவர்களில் வரைய அறிவுறுத்துகிறோம். ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில், இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
ஸ்மார்ட் வகுப்பறைக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அங்கு ஓவியங்கள் வரையும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு, கூறினர்.