/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்கள்: கிராமங்களின் எதிர்பார்ப்பு
/
தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்கள்: கிராமங்களின் எதிர்பார்ப்பு
தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்கள்: கிராமங்களின் எதிர்பார்ப்பு
தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்கள்: கிராமங்களின் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 10, 2024 09:34 PM
'கிராம ஊராட்சி மக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரின் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், 13 ஊராட்சி ஒன்றியங்களில், 264 கிராம ஊராட்சிகள் உள்ளன. மேட்டுப்பாளையம் பவானி, சிறுவாணி உள்ளிட்ட நீராதாரங்களில் இருந்து நீர் வினியோகிக்கப்படுகிறது. அத்துடன், அந்தந்த ஊராட்சிகளில் 'போர்வெல்' அமைக்கப்பட்டு, அந்த நீரும் வினியோகிக்கப்படுகிறது.'ஜல் ஜீவன்' திட்டம் அமலுக்கு வருவதற்கு முன், 90 சதவீத ஊராட்சிகளில் தனி நபர் குடிநீர் குழாய் இணைப்பு என்பது இல்லை. பொது குடிநீர் குழாய் இணைப்புகள் மட்டுமே இருந்தன. அக்குழாய்களில் வாரம் ஒரு முறை, 10 நாளுக்கு ஒரு முறை என நீர் இருப்பை பொறுத்து, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், தற்போது அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் பொருத்தப்பட்டுள்ளது, பவானி, சிறுவாணி உள்ளிட்ட நீர் நிலைகளில் இருந்து, குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் வினியோகிக்கப்படும் குடிநீரை தினசரி வினியோகிப்பது கடினம் என்ற சூழலில், கிராம ஊராட்சிகள் சார்பில் பொருத்தப்பட்டுள்ள 'போர்வெல்' தண்ணீரும் வினியோகிக்கப்படுகிறது.சில நேரங்களில் வினியோகிக்கப்படும் நீர், செந்நிறம் மாறாமல் உள்ளது; இந்த தண்ணீரை பருகுவதால் உடல் உபாதை ஏற்படுமோ என்ற அச்சம், மக்கள் மத்தியில் நிலவுகிறது. சிலர் தங்கள் வீடுகளில் 'ஆர்.ஓ., பிளான்ட்' பொருத்தி, அதிலிருந்து குடிநீர் பெற்று பயன்படுத்துகின்றனர். சிலர் 'கேன்' தண்ணீரை விலைக்கு வாங்கி, குடிநீராக பயன்படுத்துகின்றனர்.இந்நிலையில், கிராம ஊராட்சிகளில் 'ஆர்.ஓ., பிளான்ட்' பொருத்த வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. காரமடை ஊராட்சி ஒன்றியம், இலுப்பநத்தம் ஊராட்சியில், ஐந்து இடங்களில் 'எதிர் சவ்வூடு பரவல்' முறையில் தண்ணீரை சுத்தம் செய்யும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 2000 லிட்., நீர் சுத்தம் செய்யும் அளவுக்கு, இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இது, அப்பகுதி மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.'அந்த வகையில் கிராம ஊராட்சிகளில் சுத்திகரிக்கப்பட்ட நீர் வினியோகம் செய்வதை, மாவட்ட நிர்வாகம் உறுதிபடுத்த வேண்டும்' என, ஊராட்சி மக்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், தற்போது அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. சில நேரங்களில் வினியோகிக்கப்படும் நீர், செந்நிறம் மாறாமல் உள்ளது; இந்த தண்ணீரை பருகுவதால் உடல் உபாதை ஏற்படுமோ என்ற அச்சம், மக்கள் மத்தியில் நிலவுகிறது.