sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'ரூரல் பீடர்' பிரச்னைக்கு தீர்வு எப்போது? தவிக்கும் குடிமங்கலம் ஒன்றியம்

/

'ரூரல் பீடர்' பிரச்னைக்கு தீர்வு எப்போது? தவிக்கும் குடிமங்கலம் ஒன்றியம்

'ரூரல் பீடர்' பிரச்னைக்கு தீர்வு எப்போது? தவிக்கும் குடிமங்கலம் ஒன்றியம்

'ரூரல் பீடர்' பிரச்னைக்கு தீர்வு எப்போது? தவிக்கும் குடிமங்கலம் ஒன்றியம்


ADDED : மார் 29, 2024 10:34 PM

Google News

ADDED : மார் 29, 2024 10:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;குடிமங்கலம் ஒன்றியத்தில், சிறு, குறு மற்றும் விவசாயம் சார்ந்த, தொழில்களை துவக்க, 24 மணி நேர மும்முனை மின்சார வினியோகம் இல்லை. இந்த கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், தொழில் வளர்ச்சி முற்றிலுமாக பாதித்துள்ளது.

குடிமங்கலம் ஒன்றியத்தில், 23 ஊராட்சிகள் உள்ளன. தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள இந்த ஒன்றியத்தில், விவசாயம் பிரதானமாக உள்ளது.

நெகமம், ஆலாமரத்துார், கொங்கல்நகரம் உள்ளிட்ட துணை மின் நிலையங்கள் வாயிலாக இப்பகுதி கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.

இக்கிராமங்களுக்கு, 'ரூரல் பீடர்', என்ற அடிப்படையில், நாள்தோறும் குறிப்பிட்ட மணி நேரம் மட்டும், மும்முனை மின்சாரம், வினியோகிக்கப்படுகிறது. பிற நேரங்களில், துணை மின் நிலையங்களில், சம்பந்தப்பட்ட மின்பாதைகளில், இரு முனை மின்சாரம் மட்டுமே வினியோகிக்கப்படும்.

இதனால், விவசாய மின் இணைப்பு மோட்டார்களை கூட இயக்க முடியாது. போதிய மழையின்றி, நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கிணறு மற்றும் போர்வெல்களில் இருந்து, குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் எடுக்க முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொழில் வளம் இல்லை


தொழில் துறை சார்பில், 2008ம் ஆண்டு, குடிமங்கலம் ஒன்றியம், தொழில் வளத்தில் பின்தங்கிய பகுதியாக, அறிவிக்கப்பட்டது. ஒன்றியத்தில், தொழில் வளத்தை அதிகரிக்க, பல்வேறு மானியத்திட்டங்களும், மாவட்ட தொழில் மையத்தால், செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டங்களில், கடனுதவி பெற்று, தொழில் துவங்க, இளைஞர்கள், ஆர்வம் காட்டுகின்றனர்.

கயிறு திரித்தல், தென்னை நார் உற்பத்தி, தேங்காய் தொட்டியிலிருந்து கார்பன் உற்பத்தி, அட்டை பெட்டி தயாரித்தல், நார் கழிவிலிருந்து 'பித் பிளாக்' கட்டிகள் தயாரிப்பு என பல்வேறு சிறு தொழில்களுக்கான வாய்ப்பு, இப்பகுதியில், அதிகளவு உள்ளது.

ஆனால், 24 மணி நேர மும்முனை மின் வினியோகம் இல்லாததால், தொழில் துவங்க முடிவதில்லை. இத்தகைய தொழிற்சாலைகள் துவங்க, தனியாக மும்முனை மின் இணைப்பு பாதை மின்வாரியத்தால் அமைக்கப்படுகிறது.

இதற்கு, தொழில் துவங்கும் அளவிற்கு, கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை, தொழில் முனைவோருக்கு ஏற்படுகிறது.

இப்பிரச்னையால், பிற பகுதிகளுக்கு, சிறு, குறு தொழிற்சாலைகள் இடம் பெயர்ந்து வருகின்றன. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களும் வேலைவாய்ப்பின்றி பாதித்து வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் சார்பில், பல முறை அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பபட்டுள்ளது.

குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களுக்கு, 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்க தேவையான மின்பாதை உட்பட அனைத்து கட்டமைப்புகளும், உள்ளன. இருப்பினும், பல ஆண்டுகளாக கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.






      Dinamalar
      Follow us