/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால்வாய் பாலத்தை விரிவுபடுத்துங்க
/
கால்வாய் பாலத்தை விரிவுபடுத்துங்க
ADDED : பிப் 24, 2025 09:53 PM
உடுமலை; கல்லாபுரம்-அமராவதி நகர் இணைப்பு ரோட்டிலுள்ள, கால்வாய் பாலத்தை விரிவுபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை அருகே கல்லாபுரத்தில் இருந்து கோபாலபுரம் வழியாக அமராவதி அணை மற்றும் அமராவதி நகருக்கு செல்லும் இணைப்பு ரோடு உள்ளது.
இந்த ரோட்டில், எலையமுத்துார், கல்லாபுரம் மற்றும் சுற்றுப்பகுதியைச்சேர்ந்த, பல கிராம மக்கள், அமராவதி பகுதிக்கு சென்று வருகின்றனர். இவ்வழித்தடத்தில், அரசு பஸ்சும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த ரோட்டில், கல்லாபுரம் அருகே, அமராவதி அணையிலிருந்து ராமகுளம் பாசனத்துக்கு செல்லும் கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாய் மீது குறுகலாகவே பாலம் கட்டப்பட்டுள்ளது.
பாலம் வழியாக இலகு ரக வாகனம் மட்டுமே கடக்கும் சூழல் உள்ளது. போதிய தடுப்புகளும் இல்லாததால், கனரக வாகனங்கள் செல்ல முடிவதில்லை. எனவே, விளைநிலங்களுக்கு இடுபொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்களும், நெல் உள்ளிட்ட, விளைபொருட்களை எடுத்து செல்லவும் பல கி.மீ., துாரம் சுற்றி, செல்ல வேண்டியுள்ளது.
எனவே, கால்வாய் பாலத்தை விரிவுபடுத்தி, அனைத்து வாகனங்களும் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. தற்போது பயன்பாட்டிலுள்ள பாலமும் நீண்ட காலமாக பயன்பாட்டில் இருப்பதால், உறுதித்தன்மை கேள்விக்குறியாக உள்ளது.
நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்து கால்வாய் பாலத்தை உடனடியாக சிறப்பு திட்டம் வாயிலாக விரிவுபடுத்த வேண்டும்.

