/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஹவுரா அந்தியோதயா' திருப்பூரில் நிற்குமா?
/
'ஹவுரா அந்தியோதயா' திருப்பூரில் நிற்குமா?
ADDED : ஆக 19, 2024 12:06 AM
திருப்பூர்:திங்கள்தோறும் எர்ணா குளத்தில் இருந்து புறப்படும் ஹவுரா அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (எண்: 22878) பாலக்காடு, கோவை கடந்து ஈரோடு, சேலம் வழியாக மூன்றாவது நாள், மேற்கு வங்கம், ஹவுரா சென்றடைகிறது.
மறுமார்க்கமாக சனிக்கிழமை ஹவுராவில் புறப்படும் ரயில் திங்கள்கிழமை எர்ணாகுளம் வந்தடைகிறது. இந்த ரயில் திருப்பூரில் நிற்பதில்லை.
கடந்த, 15ம் தேதி, கேரள மாநிலம், ஆலுவா ஸ்டேஷனில் ரயில் நின்று செல்ல ஒப்புதல் வழங்கப்பட்டது. இதேபோல், திருப்பூரிலும் நின்று செல்ல ஒப்புதல் வழங்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பு. ரயிலில் உள்ள, 15 பெட்டிகளும் முன்பதிவில்லாத இல்லாத பொது பெட்டி. திருப்பூரில் இருந்து ஹவுரா பயணிப்போருக்கு எளிதாக இருக்கும்.
தெற்கு ரயில்வே, சேலம் கோட்டத்தில் அதிக வருவாய் அள்ளித்தரும் ஸ்டேஷன்களில் திருப்பூரும் உள்ளது. இதை மனதில் கொண்டு, திருப்பூரில் இந்த ரயில் நிற்க ஒப்புதல் தர வேண்டும்.

