ADDED : ஜூலை 24, 2024 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார், : பொங்கலுார் பகுதி வளர்ச்சி அடைந்து வரும் பகுதியாக உள்ளது. புதிய தொழில் துவங்கும் ஆர்வம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
புதிய தொழில் முனைவோர்களை தமிழக அரசும் ஊக்குவித்து வருகிறது. ஆனால் இப்பகுதியில் பெரும்பாலான இடங்களில் இருமுனை மின்சாரம் வழங்கப்படுகிறது. அதுவும் எப்போது வரும்; எப்போது போகும் என்று கணிக்க முடியாத நிலை உள்ளது.
ஏற்கனவே, தொழில் துவங்கிய பலர் மின்சார பிரச்னை காரணமாக நஷ்டம் அடைந்து வருகின்றனர். புதிதாக தொழில் துவங்கும் எண்ணத்தில் உள்ள இளைஞர்கள் அந்த எண்ணத்தை விட்டு விட்டு வேறு வேலைக்கு சென்று விடுகின்றனர்.
எனவே, அரசு இப்பிரச்னையில் தீவிர கவனம் செலுத்தி இரு முனை மின்சாரத்திற்கு பதிலாக தொழில்துறைக்கு மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

