நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; அவிநாசி, வஞ்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த மாசான் என்பவர் மனைவி சரஸ்வதி, 62. நேற்று வஞ்சிபாளையத்திலிருந்து திருப்பூர் செல்ல, அரசு டவுன் பஸ்சில் ஏற முயன்றார்.
எதிர்பாராதவிதமாக பஸ்சிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். அதில், பஸ்சின் பின் சக்கரம் சரஸ்வதி மீது ஏறியதால், அதே இடத்தில் பலியானார். திருமுருகன்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

