
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் ஜே.சி.ஐ. 'திருப்பூர் ஸ்மைல்ஸ்', தெற்கு ரோட்டரி மற்றும் மாநகராட்சி ஆகியன இணைந்து, மகளிர் தின நிகழ்ச்சி நடத்தின.
இதையொட்டி, பெண்களுக்கான மார்பக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் நடந்தது. 'பிங்க்கத்தான் 2.0' என்ற தலைப்பிலான இந்த ஊர்வலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் துவங்கியது.மேயர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார். ஜே.சி.ஐ., தெற்கு ரோட்டரி மற்றும் மாநகராட்சி துாய்மைப் பணியாளர்கள் இதில் கலந்து கொண்டனர். மங்கலம் ரோடு, ஆலங்காடு வழியாக இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.