/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நொய்யல் நதிக்கரையில் இன்று 1,008 பொங்கல்
/
நொய்யல் நதிக்கரையில் இன்று 1,008 பொங்கல்
ADDED : ஜன 16, 2024 11:41 PM
திருப்பூர்;திருப்பூர் பொங்கல் திருவிழாவில், நொய்யல் நதிக்கரையில் இன்று 1,008 பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
திருப்பூர் மாநகராட்சி, ஜீவநதி நொய்யல் சங்கம் ஆகியன இணைந்து நடத்தும் திருப்பூர் பொங்கல் திருவிழாவில் இன்று 1,008 பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நொய்யல் கரையின் தென்புறத்தில் உள்ள கமல விநாயகர் கோவில் முன், வரிசையாக ஈஸ்வரன் கோவில் பாலம் வரையில், 1,008 அடுப்புகள் தயார் செய்யும் பணி நேற்று நடைபெற்றது.
இவற்றில் இன்று காலை, 6:30 மணிக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக, விகடகவி குழுவினரின் மங்கள இசை நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து கொங்கு பண்பாட்டு மையத்தின் கலை நிகழ்ச்சி ஆகியன நடைபெறுகிறது.
அதனை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு கலைக்குழுவினர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடக்கிறது. மாலை, 4:30 மணிக்கு மேடை நிகழ்ச்சிகளும் நொய்யல் பொங்கல் திருவிழா நிறைவுவிழாவும் நடக்கிறது.

