/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூட்டுறவு வங்கி பணிக்காக 1197 பேர் தேர்வெழுதினர்
/
கூட்டுறவு வங்கி பணிக்காக 1197 பேர் தேர்வெழுதினர்
ADDED : அக் 11, 2025 11:15 PM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், மத்திய மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் அறிவிக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதனடிப்படையில் எழுத்து தேர்வு நேற்று திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றது. திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரி மற்றும் கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் இத்தேர்வு நேற்று காலை துவங்கி பிற்பகல் வரை நடைபெற்றது.
இதில் குமரன் கல்லுாரியில் 713 பேரும், கே.எஸ்.சி., பள்ளியில் 484 பேர் என மொத்தம் 1197 பேர் தேர்வெழுதினர். மாவட்ட இணைப்பதிவாளர் பிரபு தலைமையில், துறை அலுவலர்கள் தேர்வுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.