/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
12 கிலோ கஞ்சா; 3 பேர் சிக்கினர்
/
12 கிலோ கஞ்சா; 3 பேர் சிக்கினர்
ADDED : டிச 26, 2025 06:29 AM

அவிநாசி: அவிநாசி பகுதியில் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக, மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ. லோகநாதன் மற்றும் போலீசார் நேற்று கோவை பைபாஸ் சாலையில் கணினி ரவுண்டானா பகுதியில் வாகன சோதனை செய்து வந்தனர்.
அப்போது பெரிய சாக்கு பைகளில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஒடிசா மாநிலம், ரெங்காலி - சாம்பல்பூர் பகுதியைச் சேர்ந்த சனுஜா பாகர் 32, பனிடா பாங் 39, சட்டீஸ்கர், பல்ராம்பூர் பகுதியைச் சேர்ந்த ராம் பிரவேஷ் 34 என தெரிந்தது. அவர்கள் வைத்திருந்த சாக்கு பையில் ஒடிசாவில் இருந்து விற்பனைக்காக கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மூன்று பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில், சிறையில் அடைத்தனர்.

