/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீய எண்ணம் கொண்டிருந்தால் நம்மிடம் இறைவன் அகல்வார்
/
தீய எண்ணம் கொண்டிருந்தால் நம்மிடம் இறைவன் அகல்வார்
தீய எண்ணம் கொண்டிருந்தால் நம்மிடம் இறைவன் அகல்வார்
தீய எண்ணம் கொண்டிருந்தால் நம்மிடம் இறைவன் அகல்வார்
ADDED : டிச 26, 2025 06:28 AM
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. நேற்று திருச்சிகல்யாணராமன் பேசியதாவது:
இன்பம் வரும் போது சந்தோஷப் படக்கூடாது. அதே போல துன்பம் வரும் போது வருத்தப்படக்கூடாது.
இரண்டையும் சமமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஓரிடத்தில் பிரச்னை ஏற்பட்டது என்றால், முடிந்தளவு அந்த இடத்தில் இருந்து விலக வேண்டும்.
நம்மால் செய்ய முடியாததை மட்டும் பிறரிடத்தில் உதவி கேட்க வேண்டும்.
பணம், அதிகாரம், பதவி இருக்கிறது என்று எப்போதும் சக மனிதர்களை மதிக்காமல் நடக்கக் கூடாது.
நம் நாவில் இருந்து வெளிவந்த சொற்கள், மீண்டும் நம்மிடம் வராது. நாம் பிறரை எந்த வார்த்தைகளால் திட்டுகிறமோ, அந்த வார்த்தைகளை விட மிக கடுமையான சொற்களால் நம்மை பேசுவார்கள். ஒருவருக்கு தீங்கு நடக்க வேண்டும் என நம் மனதில் எண்ணம் வந்தாலே, இறைவன் நம்மிடம் இருக்க மாட்டார். எதையும் எதிர்பார்க்காமல், ஒருவருக்கு உதவி செய்தால், அதன் பலன் அந்த பிறவி முழுவதும் தொடரும்.

