ADDED : டிச 26, 2025 06:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ். அலகு - 2 சார்பில், அவிநாசி ஒன்றியம், கருமாபாளையம் கிராமத்தில் ஏழு நாள் சிறப்பு முகாம் நடந்து வருகிறது.
நான்காம் நாளான நேற்று, கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். பாரதியார் பல்கலை என்.எஸ்.எஸ். அலுவலக உதவியாளர் ராதிகா சிறப்பு விருந்தினாராக பங்கேற்று பேசினார். மாணவ செயலர்கள் தலைமையில் மாணவ, மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோர், கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடினர்.

