ADDED : நவ 18, 2026 08:14 PM
அ நிறம் | அளவு
அவிநாசி: அவிநாசி நகராட்சி பகுதியில் உள்ள கடைகள், பேக்கரிகள் மற்றும் ஓட்டல்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, மடத்துப்பாளையம் ரோட்டிலுள்ள உள்ள பேக்கரிகள், ஓட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் அரவிந்த் தலைமையிலான ஊழியர்கள் இன்று (நவ.,18) ஆய்வு மேற்கொண்டனர். சோதனையில், 7 கடைகளில் தடை செய்யப்பட்ட 14 கிலோ எடையுள்ள பாலிதீன் பேக், பிளாஸ்டிக் டம்ளர்கள் ஆகிய பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சம்பந்தப்பட்ட கடைகளுக்கு மொத்தமாக, ரூ.5,200 அபராதம் விதிக்கப்பட்டு, எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
