/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பயிர்க்காப்பீடு திட்டத்தில் 1,628 விவசாயிகள் பயன்!
/
பயிர்க்காப்பீடு திட்டத்தில் 1,628 விவசாயிகள் பயன்!
பயிர்க்காப்பீடு திட்டத்தில் 1,628 விவசாயிகள் பயன்!
பயிர்க்காப்பீடு திட்டத்தில் 1,628 விவசாயிகள் பயன்!
ADDED : நவ 02, 2025 03:18 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், கடந்தாண்டு, பயிர்க்காப்பீடு திட்டத்தின் வாயிலாக, 1,628 விவசாயிகள், 3.94 கோடி ரூபாய் காப்பீடு தொகை பெற்றுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில், மக்காச்சோளம், வாழை, தென்னை, பருத்தி, நிலக்கடலை, சோளம், கொண்டைக்கடலை, நெல், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
'மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடரின் போது, பயிர்களுக்கு சேதம் ஏற்படும் போது, அந்த இழப்பை ஈடு செய்ய, பயிர்க்காப்பீடு வசதி, அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், நடப்பாண்டு பயிர்க்காப்பீடு செய்து கொள்ள, வேளாண் துறை சார்பில், விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டு, பயிர்க்காப்பீடு திட்டத்தில், 1,628 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.
இது குறித்த விவரம் வருமாறு:
l நிலக்கடலை சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளில், 35 பேர் பயிர்க்காப்பீடு திட்டத்தில் இணைந்தனர்; தங்களது பிரிமிய தொகையாக, 2,235 ரூபாய் செலுத்தினர். அவர்களில், காப்பீடுக்கு விண்ணப்பித்த, 11 பேருக்கு, 11 ஆயிரம் ரூபாய் விடுவிக்கப்பட்டது.
l மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளில், 1,632 பேர் திட்டத்தில் இணைந்து, தங்களது பங்களிப்பு தொகையாக, 16 லட்சத்து 45 ஆயிரத்து 922 ரூபாய் செலுத்தியிருந்தனர். காப்பீடுக்கு விண்ணப்பித்த 1,271 பேருக்கு, 3 கோடியே 62 லட்சத்து 59 ஆயிரத்து 281 ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
l நெல் சாகுபடியை பொறுத்தவரை, 221 விவசாயிகள் காப்பீடு திட்டத்தில் இணைந்து, பிரிமியத் தொகையாக, ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 278 ரூபாய் செலுத்தியிருந்தனர். காப்பீடுக்கு விண்ணப்பித்த, 193 பேருக்கு, 26 லட்சத்து 98 ஆயிரத்து 466 ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
l சோளம் சாகுடியில், 255 விவசாயிகள் காப்பீடு திட்டத்தில் இணைந்து, பிரிமிய தொகையாக, 18 ஆயிரத்து 791 ரூபாய் செலுத்தியிருந்தனர். காப்பீடு தொகை கேட்டு விண்ணப்பித்த, 142 பேருக்கு, 3 லட்சத்து 67 ஆயிரத்து 662 ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
l கொண்டைக்கடலை சாகுபடியில், 11 விவசாயிகள் காப்பீடு திட் டத்தில் இணைந்து, பிரிமிய தொகையாக, 5,703 ரூபாய் செலுத்தியிருந்தனர். காப்பீடு தொகை கேட்ட, 11 விவசாயிகளுக்கும், 90 ஆயிரத்து 265 ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு அதிகரிப்பு: கடந்தாண்டு, ஒட்டு மொத்தமாக, பயிர்க்காப்பீடு திட்டத்தில், 2,154 விவசாயிகள் இணைந்து, பிரிமிய தொகையாக 18 லட்சத்து 61 ஆயிரத்து 929 ரூபாய் செலுத்தியிருந்தனர்; இதில், காப்பீடு தொகை கேட்டு விண்ணப்பித்த 1,628 விவசாயிகளுக்கு, 3 கோடியே 94 லட்சத்து 26 ஆயிரத்து 674 ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான பயிர்க்காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் இணைந்து வருகின்றனர்; அதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
- வேளாண் துறையினர்:

