sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அமெரிக்க ஏற்றுமதி வர்த்தகத்தை தக்கவைப்போமா? மத்திய அரசின் உதவிகளை எதிர்நோக்கும் தொழில் துறையினர்

ADDED : நவ 02, 2025 03:17 AM

Google News

ADDED : நவ 02, 2025 03:17 AM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: அமெரிக்காவுடனான ஏற்றுமதி வர்த்தகத்தை தக்க வைக்க, ஒப்பந்தம் நிறைவேறும் வரை, மத்திய அரசு அவசர அவசிய உதவிகளை செய்ய முன்வர வேண்டும் என்பது, ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

அமெரிக்கா, கடந்த ஆக., மாதம், இந்திய பொருட்கள் இறக்குமதிக்கு, 50 சதவீதம் (டேரிப்) வரிவிதித்தது. முன்பு முழு வேகத்தில் ஓடிய தையல் இயந்திரங்களில், சிறிய ஓய்வு தென்படுகிறது. 'பிராண்ட்' நிறுவனங்களுக்கு அனுப்ப வேண்டிய 'டீ-சர்ட்', 'லெகின்ஸ்', குழந்தைகள் உடைகள் ஆகியவை தேக்கமடைந்துள்ளன.

திடீர் வரி உயர்வு, இந்தியா -அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவையே ஸ்தம்பிக்க செய்துள்ளது. தென் கொரியா ஏ.பி.இ.சி., மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், 'அமெரிக்கா பர்ஸ்ட் -2.0' என்ற கொள்கையை அறிவித்தார்.

அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வரும் ஏற்றுமதியாளர் ஒருவர் கூறுகையில், ''ஒரே நாளில், அமெரிக்க வர்த்தக உறவு தலைகீழாக மாறிவிட்டது. கடன், வேலையிழப்பு, விற்பனை பாதிப்பு என, பல்வேறு பாதிப்பு ஏற்படுகிறது. திருப்பூரில் உள்ள ஏற்றுமதியாளர்களில், விற்க முடியாத ஆடைகள் கையிருப்பாகவும் வைக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள், தங்களது கடனை திருப்பி செலுத்த கூடுதல் அவகாசம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். சில தொழிற்சாலைகள், தற்காலிகமாக பணியாளர்களுக்கு வேலையை குறைத்துள்ளன.

முந்தும் 'வியட்நாம்' இந்தியாவுக்கு மாற்றாக, வரி செலவுகளை கட்டுக்குள் வைக்க, அமெரிக்க வர்த்தகர்கள் வியட்நாமுக்கு மாறிவருகின்றனர். வங்கதேசம், கம்போடியா நாடுகளுக்கு மாற விசாரணையும் அதிகரித்துள்ளது. அந்நாடுகளில், அதிகபட்ச வரி, 20 சதவீத்துக்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

திடீர் வரி உயர்வால், இந்தியாவில் இருந்து வாங்கும் 'டி-சர்ட்' ஒன்றின் விலை, 50 சதவீதம் அதிகரித்தால், நாங்கள் எப்படி வர்த்தகம் செய்ய முடியும். சுமூக உடன்பாடு ஏற்படும் வரை, வேறு பாதையை தேடி வருகிறோம்.

அமெரிக்காவுடன், கடந்த ஐந்து ஆண்டுகளாக வளர்ந்த வர்த்தகம், திடீரென சரிவை சந்திக்க துவங்கியுள்ளது. ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருந்தாலும், அரசு தரப்பில் இருந்தும் சரியான உதவி அவசியம் என்கின்றனர் ஏற்றுமதியாளர்கள். அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் திருப்பூர் மாறியாக வேண்டும். காலத்துக்கு ஏற்ப புதுமையுடன் மீண்டும் தன்னை உருவாக்கி, 'மேட் இன் திருப்பூர்' என்ற அந்தஸ்தை பாதுகாக்க வேண்டும்.

பல்வேறு நெருக்கடிகளையும், சோதனைகளையும், வெற்றிகரமாக கடந்து வந்த திருப்பூர், இப்பிரச்னையையும் வெற்றிகரமாக தாண்டி சாதனை படைக்கும். இருப்பினும், மத்திய, மாநில அரசுகளின் உதவியும் அத்தியாவசியம் என, ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருப்பூர்: அமெரிக்காவுடனான ஏற்றுமதி வர்த்தகத்தை தக்க வைக்க, ஒப்பந்தம் நிறைவேறும் வரை, மத்திய அரசு அவசர அவசிய உதவிகளை செய்ய முன்வர வேண்டும் என்பது, ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

அமெரிக்கா, கடந்த ஆக., மாதம், இந்திய பொருட்கள் இறக்குமதிக்கு, 50 சதவீதம் (டேரிப்) வரிவிதித்தது. முன்பு முழு வேகத்தில் ஓடிய தையல் இயந்திரங்களில், சிறிய ஓய்வு தென்படுகிறது. 'பிராண்ட்' நிறுவனங்களுக்கு அனுப்ப வேண்டிய 'டீ-சர்ட்', 'லெகின்ஸ்', குழந்தைகள் உடைகள் ஆகியவை தேக்கமடைந்துள்ளன.

திடீர் வரி உயர்வு, இந்தியா -அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவையே ஸ்தம்பிக்க செய்துள்ளது. தென் கொரியா ஏ.பி.இ.சி., மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ''அமெரிக்கா பர்ஸ்ட் -2.0' என்ற கொள்கையை அறிவித்தார்.

அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வரும் ஏற்றுமதியாளர் ஒருவர் கூறுகையில், ''ஒரே நாளில், அமெரிக்க வர்த்தக உறவு தலைகீழாக மாறிவிட்டது. கடன், வேலையிழப்பு, விற்பனை பாதிப்பு என, பல்வேறு பாதிப்பு ஏற்படுகிறது. திருப்பூரில் உள்ள ஏற்றுமதியாளர்களில், விற்க முடியாத ஆடைகள் கையிருப்பாகவும் வைக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள், தங்களது கடனை திருப்பி செலுத்த கூடுதல் அவகாசம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். சில தொழிற்சாலைகள், தற்காலிகமாக பணியாளர்களுக்கு வேலையை குறைத்துள்ளன.

முந்தும் 'வியட்நாம்' இந்தியாவுக்கு மாற்றாக, வரி செலவுககை கட்டுக்குள் வைக்க, அமெரிக்க வர்த்தகர்கள் வியட்நாமுக்கு மாறிவருகின்றனர். வங்கதேசம், கம்போடியா நாடுகளுக்கு மாற விசாரணையும் அதிகரித்துள்ளது. அந்நாடுகளில், அதிகபட்ச வரி, 20 சதவீத்துக்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

திடீர் வரி உயர்வால், இந்தியாவில் இருந்து வாங்கும் 'டி-சர்ட்' ஒன்றின் விலை, 50 சதவீதம் அதிகரித்தால், நாங்கள் எப்படி வர்த்தகம் செய்ய முடியும். சுமூக உடன்பாடு ஏற்படும் வரை, வேறு பாதையை தேடி வருகிறோம்.

அமெரிக்காவுடன், கடந்த ஐந்து ஆண்டுகளாக வளர்ந்த வர்த்தகம், திடீரென சரிவை சந்திக்க துவங்கியுள்ளது. ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருந்தாலும், அரசு தரப்பில் இருந்தும் சரியான உதவி அவசியம் என்கின்றனர் ஏற்றுமதியாளர்கள்.

அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் திருப்பூர் மாறியாக வேண்டும். காலத்துக்கு ஏற்ப புதுமையுடன் மீண்டும் தன்னை உருவாக்கி, 'மேட் இன் திருப்பூர்' என்ற அந்தஸ்தை பாதுகாக்க வேண்டும்.

பல்வேறு நெருக்கடிகளையும், சோதனைகளையும், வெற்றிகரமாக கடந்து வந்த திருப்பூர், இப்பிரச்னையையும் வெற்றிகரமாக தாண்டி சாதனை படைக்கும். இருப்பினும், மத்திய, மாநில அரசுகளின் உதவியும் அத்தியாவசியம் என, ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நட்பு நாடு தான்

--------------

* குமார் துரைசாமி, இணை செயலாளர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்:

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு விரைவில் ஏற்படும். பொருளாதாரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு கோருகின்றன. ரஷ்ய கச்சா எண்ணெய் சார்பு படிப்படியாக குறைப்பது ஊக்குவிக்கப்படும்.

மலேஷிய மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்த்தோம். மேலும் சில வாரங்கள் தாமதமானாலும், விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும். உலக அளவில், வேகமாக வளர்ந்து வரும் இந்தியா மற்றும் அமெரிக்கா எப்போதும் நட்புநாடாக வைக்கும்.

சலுகை வேண்டும்

----------------

* ஜெய்பிரகாஷ், வழிகாட்டி ஆலோசகர், 'ஸ்டார்ட் அப் இந்தியா':

திருப்பூர் மிக விலை குறைவான 'டி-சர்ட்'டுகளை ஏற்றுமதி செய்தது. இனிமேல், பசுமை, மறுசுழற்சி, மற்றும் 'ஏஐ' வழி உற்பத்தி வாயிலாக, உலகத்துக்குப் புதுமை ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகளும் உள்ளன. அமெரிக்காவுடன் மறைமுக பேச்சுவார்த்தை நடக்கிறது.

ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, 3 சதவீத வட்டி தள்ளுபடி, ஜி.எஸ்.டி. ரீபண்ட் தாமத நிவாரணம், 'டிராபேக்' சலுகை, 'போக்கஸ் மார்க்கெட்' திட்டத்தின் வாயிலாக அமெரிக்க ஏற்றுமதிக்கு கூடுதல் சலுகை வழங்கப்பட வேண்டும். உண்மையாக, பாதிப்புகளை கணக்கிட்டு, உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும்.

போட்டி அதிகம்

---------------

* சுனில்குமார், துணை தலைவர், திருப்பூர் மாவட்டம், இந்திய தொழிற்கூட்டமைப்பு.

புதிய மார்க்கெட் 'போக்கஸ்' செய்வது உடனடியாக முடியாது. நம்மை போலவே சீனா அதிக பலத்துடன் இருக்கிறது. பல்வேறு நாடுகளின் போட்டியை சமாளித்தாக வேண்டும். உலக சந்தையில், சீனா, வங்கதேசம், வியட்நாம், கம்போடியாவின் போட்டியை சமாளித்தாக வேண்டும். அதற்கு பின்னரே புதிய வாய்ப்புகளை பெற முடியும்.

தொழில்முறையை பொறுத்தவரை, எதுவும் எளிதானது அல்ல. உலக சந்தையில், பல்வேறு நாட்டு நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டும். அவ்வாறு போட்டியிட, அரசு தரப்பின் உதவி அவசியம்; தொழிலாளர் நடைமுறையிலும் சீர்திருத்தம் இருக்க வேண்டும்.

ஏமாற்றம்

-----------

* செந்தில்வேல், பொதுசெயலாளர், திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம்.

அமெரிக்க வரி உயர்வுக்கு பின், திருப்பூரில் இருந்து புதிய ஆர்டர் விசாரணை நடப்பதில்லை. பெரிய ஏற்றுமதி நிறுவனங்களும், நீண்டநாள் தொடர்பை பாதுகாக்க, அதிகளவிலான தள்ளுபடியுடன் வர்த்தகம் செய்கின்றன; இது அப்படியே தொடர முடியாது.

மத்திய அரசு, ஒப்பந்தம் நிறைவேறும் வரை, ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கும் சலுகைகளை வழங்கி, தொழிலை பாதுகாக்க வேண்டும். பல்வேறு தரப்பிலும் கருத்து கேட்ட பின்னரும், எவ்வித உதவியையும் அறிவிக்காமல் இருப்பது ஏமாற்றமாக இருக்கிறது.

அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் திருப்பூர் மாறியாக வேண்டும். காலத்துக்கு ஏற்ப புதுமையுடன் மீண்டும் தன்னை உருவாக்கி:

      Dinamalar
      Follow us