/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜே.இ.இ., முதன்மை தேர்வு 190 மாணவர் பங்கேற்பு; 11 பேர் 'ஆப்சென்ட்'
/
ஜே.இ.இ., முதன்மை தேர்வு 190 மாணவர் பங்கேற்பு; 11 பேர் 'ஆப்சென்ட்'
ஜே.இ.இ., முதன்மை தேர்வு 190 மாணவர் பங்கேற்பு; 11 பேர் 'ஆப்சென்ட்'
ஜே.இ.இ., முதன்மை தேர்வு 190 மாணவர் பங்கேற்பு; 11 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : ஜன 23, 2025 12:27 AM

திருப்பூர்; திருப்பூரில் நடந்த ஜே.இ.இ., மெயின் தேர்வை, 190 பேர் எழுதினர்; தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில், 11 பேர் பங்கேற்கவில்லை.
ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ.,) தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நாடு முழுதும் இத்தேர்வு நேற்று நடத்தியது. திருப்பூர், மங்கலம் ரோடு, குமரன் மகளிர் கல்லுாரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.
நேற்று ஜே.இ.இ., முதன்மை தேர்வு துவங்கியது. காலை, 101 மாணவர்களும், மதியம், 100 மாணவர்களும் என மொத்தம், 201 பேர் விண்ணப்பித்திருந்தனர். காலையில், 93, மதியம், 97 என பேர் என, 190 பேர் தேர்வு எழுதினர். காலை எட்டு, மதியம் மூன்று பேர் என, 11 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.,) திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், கே.எம்.சி., சிபிஎஸ்இ பள்ளி செயலாளர் மனோகரன் தலைமையிலான கண்காணிப்பு அலுவலர்கள் குழுவினர் ஒருங்கிணைத்தனர். போலீசார், பாதுகாப்பு குழுவினர் நீண்ட பரிசோதனைக்கு பின் மாணவ, மாணவியரை தேர்வறைக்குள் அனுமதித்தனர்.

