/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொல்லத்துக்கு மேலும் 2 சிறப்பு ரயில் இயக்கம்
/
கொல்லத்துக்கு மேலும் 2 சிறப்பு ரயில் இயக்கம்
ADDED : நவ 14, 2025 12:13 AM
திருப்பூர்: வரும், 17ம் தேதி கார்த்திகை மாதம் பிறக்க உள்ள நிலையில், சபரிமலை செல்லும் பயணிகள் வசதிக்காக, கொல்லத்துக்கு இரண்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மசூலிப்பட்டிணம் - கொல்லம் சிறப்பு ரயில் (எண்:07103) டிச. 5, 12 மற்றும், 19ம் தேதி, ஜன. 9, 16ம் தேதி வெள்ளிக்கிழமைகளில் இயங்கும். காலை 11:00 மணிக்கு மசூலிப்பட்டினத்தில் புறப்படும் ரயில், மறுநாள் இரவு 10:00 மணிக்கு கொல்லம் சென்றடையும்; திருப்பூருக்கு சனிக்கிழமை காலை, 10:28 மணிக்கு வரும்.மறுமார்க்கமாக, கொல்லம் - மசூலிப்பட்டினம் சிறப்பு ரயில் (எண்:07104) டிச. 7, 14 மற்றும், 21, ஜன. 11, 18 ஆகிய தேதிகளில் அதிகாலை 2:30 மணிக்கு கொல்லத்தில் புறப்பட்டு, மறுநாள் மதியம், 12:30 மணிக்கு மசூலிப்பட்டினம் சென்று சேரும்.
திருப்பூருக்கு மதியம் 12:15 மணிக்கு ரயில் வரும். சார்லபள்ளி (தெலுங்கானா) - கொல்லம் சிறப்பு ரயில் (எண்: 07107) வரும் 17 முதல் ஜன. 19 வரை திங்கள் தோறும் இயங்கும். மறுமார்க்கமாக சிறப்பு ரயில் (எண்:07108) கொல்லம் - சார்லபள்ளி இடையே, வரும், 19 முதல் ஜன. 21 வரை புதன்தோறும் இயங்கும் என சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

