/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
2 திருட்டு வழக்கில் வாலிபர்களுக்கு சிறை
/
2 திருட்டு வழக்கில் வாலிபர்களுக்கு சிறை
ADDED : அக் 01, 2024 11:23 PM
திருப்பூர்: ஊத்துக்குளியில், இரண்டு திருட்டு வழக்கில், இருவருக்கு சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.
ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளியை சேர்ந்தவர் சின்னராசு, 42. கடந்த, பிப்., 2ம் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.
ஒரு சவரன் தங்க நாணயம் திருடு போயிருந்தது. ஊத்துக்குளி போலீசார் விசாரித்து, சிவகங்கையை சேர்ந்த ராஜ்குமார், 25, பிரவீன்குமார், 27 மற்றும் ரஞ்சித்குமார், 23 ஆகியோரை கைதுசெய்தனர்.
கடந்த பிப்., 18ம் தேதி கொடியம்பாளையத்தில் வீட்டு முன் நிறுத்தியிருந்த டூவீலர் திருடு போனது. போலீசார் விசாரித்து, அழகாபுரத்தை சேர்ந்த பிரதீப், 25 என்பவரை கைது செய்தனர். இவ்விரு வழக்குகளிலும் விரைவாக புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இவ்விரு வழக்கு விசாரணை ஊத்துக்குளி ஜே.எம்., கோர்ட்டில் நடந்தது. திருட்டு வழக்கில், ராஜ்குமாருக்கு மூன்றாண்டு சிறைதண்டனையும், பிரதீப்புக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்தார்.
இரு வழக்கிலும், விரைவாக இறுதி அறிக்கை தாக்கல் செய்து, சாட்சிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஏழு மாதங்களுக்குள் தண்டனை பெற்று தந்த வழக்கின் புலன் விசாரணை போலீசாரை, எஸ்.பி., அபிஷேக் குப்தா பாராட்டினார்.

