/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அன்பு கரங்கள் திட்டத்தில் 246 குழந்தைகள் இணைப்பு
/
அன்பு கரங்கள் திட்டத்தில் 246 குழந்தைகள் இணைப்பு
ADDED : செப் 16, 2025 09:52 PM
- நமது நிருபர் -
திருப்பூர் மாவட்டத்தில் 'அன்பு கரங்கள்' திட்டத்தில், 246 குழந்தைகள் இணைக்கப்பட்டுள்ளனர்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில், அன்பு கரங்கள் என்ற திட்டத்தினை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்றுமுன்தினம் சென்னையில் துவக்கி வைத்தார்.
அதனையொட்டி, திருப்பூர் அருகேயுள்ள பெருமாநல்லுாரில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் தலைமை வகித்தார். மேயர் தினேஷ் குமார், முன்னிலை வகித்தார்.
செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் பங்கேற்று, அன்பு கரங்கள் திட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டை மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினர்.
இத்திட்டத்தின் வாயிலாக, அவிநாசி வட்டாரத்தில், 28 குழந்தைகளுக்கும், தாராபுரம் - 32, காங்கயம் - 32, மடத்துக்குளம் - 12, பல்லடம் -- 23, திருப்பூர் வடக்கு - 33, தெற்கு பகுதி - 23, உடுமலை - 43 மற்றும் ஊத்துக்குளி - 16, என மொத்தம் 246 குழந்தைகளை திட்டத்தில் இணைக்கப்பட்டு குழந்தைகள் வங்கிக்கணக்கில், 2 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படுவதாக, அமைச்சர் சாமிநாதன் குறிப்பிட்டார்.
விழாவில், ஆர்.டி.ஓ., சிவப்பிரகாஷ், சி.இ.ஓ., காளிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.