/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உரிமைத்தொகை கோரி 26, 675 விண்ணப்பங்கள்
/
உரிமைத்தொகை கோரி 26, 675 விண்ணப்பங்கள்
ADDED : ஆக 03, 2025 11:40 PM
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஜூலை 30ம் தேதி வரை நடத்தப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில், மகளிர் உரிமைத்தொகைகோரி, 26, 675 விண்ணப்பங்கள் குவிந்தன.
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில், பொதுமக்களிடமிருந்து, 15 அரசு துறை சார்ந்த, 46 வகை விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டு, ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன. முகாம்களில், மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க பெண்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், நான்கு கட்டங்களாக மொத்தம் 325 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 120 முகாம்கள் நடத்தப்படுகின்றன. கடந்த 15 முதல் 30 ம் தேதி வரை, மொத்தம் 53 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. முகாம்களில், பொதுமக்களிடமிருந்து மொத்தம் 56 ஆயிரத்து 191 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக, திருப்பூர் வடக்கு தாலுகாவில் நடத்தப்பட்ட முகாம்களில், 8,595; திருப்பூர் தெற்கு தாலுகா பகுதிகளில் நடத்தப்பட்ட முகாம்களில், 7,545 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன. தாராபுரத்தில், 7,527; அவிநாசியில், 7,120; உடுமலையில், 6,672; காங்கயத்தில் 6364; பல்லடத்தில்,5,252; ஊத்துக்குளியில் 4,437; மடத்துக்குளத்தில், 2679 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் நடத்தப்பட்டுவரும் முகாம்களில், மற்ற விண்ணப்பங்களைவிட, மகளிர் உரிமைத்தொகைகோரும் விண்ணப்பங்களே அதிக எண்ணிக்கையில் பதிவாகிவருகிறது. பெறப்பட்டுள்ள மொத்த விண்ணப்பங்களில், 47.47 சதவீதம் அதாவது 26 ஆயிரத்து 675 விண்ணப்பங்கள், மகளிர் உரிமைத்தொகைக்கானவையே.