/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மினி பஸ் நடத்துனரை தாக்கிய 3 பேர் கைது
/
மினி பஸ் நடத்துனரை தாக்கிய 3 பேர் கைது
ADDED : செப் 18, 2025 11:24 PM
திருப்பூர்; மினி பஸ் நடத்துனரை தாக்கிய, மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
தஞ்சாவூரை சேர்ந்தவர் வீரமணி, 21; திருப்பூரில் மினி பஸ்சில் நடத்துனராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, மத்திய பஸ் ஸ்டாண்டுக்கு பல்வேறு பகுதிகள் வழியாக பஸ் சென்று கொண்டிருந்தது. கோல்டன் நகர், எம்.ஜி.ஆர்., காலனியில், மூன்று பேர் பஸ்சில் ஓடி வந்து ஏறினர். இதை பார்த்த நடத்துனர், அவர்களிடம் கேள்வி எழுப்பினார்.
இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே, வீரமணியை, மூன்று பேரும் தாக்கினர். இதுகுறித்து புகாரின் பேரில், அஜீத், 28, நேசமணி, 24 மற்றும் சிவா, 28 ஆகியோரை கைது செய்து வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.